Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது அவசியம் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார்.

கொழும்பில் செயற்பட்டுவருகின்ற வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றைய தினம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திடம் உள்ள பலரிடம் புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அச்சம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அதனூடாக ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவுபடும் என்றும், தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்க்கின்றபடி சமஸ்டி தீர்வும், வடக்கு, கிழக்கு இணைப்பும் வழங்கப்பட்டுவிடும் எனவும் தென்னிலங்கையிலுள்ள சில பேரினவாத அமைப்புக்களும், சில அரசியல்வாதிகளும் கூறிவருகின்றனர்.

மேலும் பௌத்த சாசனத்திற்கு உரிய இடம் அளிக்கப்பட்டுவிடாது என்றும் இதனால் பௌத்த தர்மமும், பௌத்த மக்களும் தாழ்ந்துவிடுவார்கள் என்றும் குறித்த பிரிவினர் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இவ்வாறான தவறான பிரசாரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை - மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்  பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் …