Wednesday , April 10 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / டிக் டாக் விபரீத ஆசையால் உயிரை விட்ட இளைஞர்… வைரல் வீடியோ

டிக் டாக் விபரீத ஆசையால் உயிரை விட்ட இளைஞர்… வைரல் வீடியோ

டிக் டாக் ஆசையால் உயிரை விட்ட இளைஞர்… வைரல் வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற 18 வயது இளைஞர், டிக் டாக்கில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இது வரை பல டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ராஜா தனது நண்பர்களுடன் கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு டிக் டாக் வீடியோ எடுக்கவேண்டுமென தோன்றியுள்ளது.

உடனே தனது நண்பர்களை மொபைலில் வீடியோ எடுக்க சொல்லி கால்வாயில் தலைகீழாக குதித்துள்ளார். அவர் குதித்த இடத்தில் ஏராளமான பாறைகள் இருந்துள்ளன. குதித்த வேகத்தில் பாறை அவரது தலையில் அடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம், வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv