Saturday , December 6 2025
Breaking News
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் !

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் !

கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது இந்த அக்ழ்வினை முன்னெடுத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் புதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து இதற்கு முன்னரும் இத்தகையதொரு அகழ்வு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டபோதும், எந்ததொரு பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆவணங்கள், மற்றும் ஆபரணங்கள் தேடி மீண்டும் இன்று அகழ்வு பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020 மேஷம் இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் …