Friday , December 13 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்

கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுகுறித்து விடுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையை ஐகோர்ட்டில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …